web analytics
 
Month: November 2015

Atal Pension Yojana (அடல் ஓய்வூதியத் திட்டம்)

No Comments
Pradhan Mandri APY

Atal Pension Yojana – அடல் ஓய்வூதியத் திட்டம்

Pradhan Mandri Jan-Dhan Yojana

Pradhan Mandri Jan-Dhan Yojana

அடல் ஓய்வூதியத் திட்டம்

இத்திட்டம் வருமான வரி செலுத்தத் தேவையில்லாத மற்றும் வேறு எந்த சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பயனடையாத குடிமக்களுக்கு வரப் பிரசாதமாகக் கிடைத்திருக்கிறது.

அடல் ஓய்வூதியத் திட்டம்

அடல் ஓய்வூதியத் திட்டம் (Atal Pension Yojana)

திட்டம் – வரைமுறை மற்றும் கட்டுப்பாடுகள்

  • இத்திட்டத்தில் 18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்ட குடிமக்கள் சேரலாம்
  • வேறு எந்த சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் (உதாரணம்: வருங்கால வைப்பு நிதி) பயனாளியாக இருக்க கூடாது
  • வருமான வரி கட்டத் தேவையில்லாத வருமானமுடையவராய் இருத்தல் அவசியம்
  • இத்திட்டத்தில் இணையும்போது நிர்ணயிக்கும் ஓய்வூதியத் தொகையே இறுதியானது.
  • ஓய்வூதியம் குறைந்த பட்சம் மாதம் ரூ.1000 / ரூ.2000 / ரூ.3000 / ரூ.4000 / ரூ.5000 என்ற அளவுகளிலேயே கிடைக்கப்பெறும். ஒருவேளை இந்நிதியிலிருந்து அதிகப்படியான வருமானம் வரும் பட்சத்தில் பயனாளிகளுக்கும் அதற்கேற்ப அதிகம் கிடைக்கலாம்.

 

 

சேர்க்கை

  • வங்கிகள் முலம்தான் இத்திட்டத்தைப் பெற இயலும்
  • இத்திட்டத்தை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயோ அல்லது வலைதள வங்கிச் சேவையிலோ பெறலாம்.
  • ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருப்பின் ஏதாவதொரு கணக்கில் மட்டுமே இத்திட்டத்தில் இணைய முடியும்.

 

 

சலுகை

  • 31.12.2015க்குள் இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு 5 வருடங்களுக்கு, 50% சதவீதம் அல்லது வருடத்திற்கு ரூ.1000, இவற்றில் எது குறைவோ அதை மத்திய அரசாங்கமே செலுத்தும். (2015-16 லிருந்து 2019-20 வரை)

 

ப்ரீமியம்

  • 18 வயதில் சேரும் ஒருவர் மாதம் ரூ.1000 ஓய்வூதியம் பெற விரும்பினால் அவர் மாதம் ரூ.42 செலுத்த வேண்டும்.
  • 40 வயதில் சேரும் ஒருவர் மாதம் ரூ.1000 ஓய்வூதியம் பெற விரும்பினால் அவர் மாதம் ரூ.291 செலுத்த வேண்டும்.
  • எனவே எவ்வளவு சிறு வயதில் இத்திட்டத்தில் இணைகிறோமோ அவ்வளவிற்கு நாம் கட்ட வேண்டிய தொகை குறையும்.
  • பிரீமியம் மாதாந்திரமாகவோ, மூன்று மாதங்களுக்கொருமுறையாகவோ, வருடத்திற்கிருமுறையாகவோ செலுத்தலாம்.

 

பயன்

  • இத்திட்டத்தில் ஒருவர் செலுத்தும் காலமானது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆகும்
  • 60 வயதிலிருந்து ஓய்வூதியம் மாதாமாதம் கிடைக்கும்.
  • பயனாளிக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், அவரது மறைவிற்குப் பிறகு அவரது துணைவருக்கு வழங்கப்படும். அவர்களிருவரின் மறைவிற்குப் பிறகு வாரிசுதாரருக்கு இழப்புத் தொகை வழங்கப்படும்

 

 

விளக்கம்

மாதம் ரூ. 1000 (குறைந்தபட்சம்) ஓய்வூதியம் பெற, கட்ட வேண்டிய ப்ரீமியம் மற்றும் இதர விபரங்கள் இதோ.

Atal Pension 1000

Monthly Pension 1000

 

மாதம் ரூ. 2000 (குறைந்தபட்சம்) ஓய்வூதியம் பெற, கட்ட வேண்டிய ப்ரீமியம் மற்றும் இதர விபரங்கள் இதோ.

Monthly Pension 2000

Monthly Pension 2000

 

மாதம் ரூ. 3000 (குறைந்தபட்சம்) ஓய்வூதியம் பெற, கட்ட வேண்டிய ப்ரீமியம் மற்றும் இதர விபரங்கள் இதோ.

Monthly Pension 3000

Monthly Pension 3000

 

மாதம் ரூ. 4000 (குறைந்தபட்சம்) ஓய்வூதியம் பெற, கட்ட வேண்டிய ப்ரீமியம் மற்றும் இதர விபரங்கள் இதோ.

Monthly Pension 4000

Monthly Pension 4000

 

மாதம் ரூ. 5000 (குறைந்தபட்சம்) ஓய்வூதியம் பெற, கட்ட வேண்டிய ப்ரீமியம் மற்றும் இதர விபரங்கள் இதோ.

Monthly Pension 5000

Monthly Pension 5000

Pradhan Mantri Suraksha Bima Yojana (சுரக்ஷா பீமா விபத்து காப்பீட்டுத் திட்டம்)

No Comments
Pradhan Mandri - PMSBY

Pradhan Mantri Suraksha Bima Yojana – சுரக்ஷா பீமா விபத்து காப்பீட்டுத் திட்டம்

Pradhan Mandri Jan-Dhan Yojana

Pradhan Mandri Jan-Dhan Yojana

பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா விபத்து காப்பீட்டுத் திட்டம்

இத்திட்டம் ஒரு வருடத்திற்கு விபத்து காப்பீடு வழங்கும். வருடா வருடம் புதுப்பித்துக்கொள்ளலாம்.

Pradhan Mantri Suraksha BY

Pradhan Mantri Suraksha BY

திட்டம்

  • ஒரு வருட கால ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
  • வருடா வருடம் புதுப்பிக்கப்படும்
  • வங்கிகள் முலம்தான் இத்திட்டத்தைப் பெற இயலும்

திட்ட வரைமுறை

  • வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும், வயது 18லிருந்து 70 வயதிற்குட்பட்ட, யார் வேண்டுமானாலும், இத்திட்டத்தில் இணையலாம்
  • ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால், ஏதாவதொரு கணக்கில் மட்டுமே இத்திட்டத்தைப் பெற முடியும்!
  • ஆதார் எண் இதில் முதன்மைப்பங்கு வகிக்கும்

சேர்க்கை காலம்

  • இத்திட்டத்தின் ஆரம்ப காலப் பயன் 01.06.2015 முதல் 31.05.2016 வரை. இதில் சேர, 31.05.2015 க்குள் ஒவ்வொருவரும் தமது கணக்கிலிருந்து பிரீமியத்தைப் பிடிக்க அனுமதித்து ஒப்புதலளிக்க வேண்டும்
  • ஆரம்ப காலச் சலுகையாக, 31.08.2015 வரை கூட இத்திட்டத்தில் இணையலாம். இந்த விலக்கு மேலும் மூன்று மாதங்களுக்குக் கூட அரசாங்கத்தால் நீட்டிக்கப்படலாம். 31.08.2015க்கு பிறகு இத்திட்டத்தில் சேரும்போது, சில சிறப்பு கட்டுப்பாடுகளை ஏற்பதோடு, ப்ரீமியம் முழுவதும் செலுத்த வேண்டும்.

நன்மைகள்

விபத்து காப்பீட்டின் பயனாவது:

  • விபத்தில் இறந்தால் ரூ.2 இலட்சம் வழங்கப்படும்
  • விபத்தில் இரண்டு கண்களும் பார்வை பறிபோனாலோ அல்லது இரண்டு கால்கள் செயலிழந்து போனாலோ அல்லது இரண்டு கைகள் செயலிழந்து போனாலோ அல்லது ஒரு கண்ணின் பார்வையும் ஒரு கால் அல்லது ஒரு கையும் செயலிழந்து போனாலோ ரூ.2 இலட்சம் வழங்கப்படும்
  • விபத்தில் ஒரு கண் பார்வை பறிபோனாலோ அல்லது ஒரு கை செயலிழந்து போனாலோ அல்லது ஒரு கால் செயலிழந்து போனாலோ ரூ.1 இலட்சம் வழங்கப்படும்

ப்ரீமியம்

  • ப்ரீமியம் ஆண்டுக்கு ஒருவருக்கு ரூபாய் 12 மட்டும். அதுவும் அவரவர்களின் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து பிடிக்கப்படும். ப்ரீமியம் செலுத்த கடைசி தேதி 31.05.2015. அதன் பிறகும் கூட ப்ரீமியம் செலுத்தலாம். ஆனால் காப்பீடு 01.06.2015 லிருந்தே தொடங்கும்; ப்ரீமியம் தொகை ஆண்டுக்கொருமுறை பரிசீலிக்கப்படும். எனினும் முதல் மூன்று ஆண்டுகள் இதிலிருந்து அதிகரிக்கப்படாது.

தகுதி மற்றும் நிபந்தனைகள்

  • 18 வயதிலிருந்து 70 வயது வரை உள்ள சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் யாரும் இத்திட்டத்தில் இணையலாம்.

முதன்மை காப்பீட்டாளர்

  • பங்கெடுக்கும் வங்கிகளே முதன்மை காப்பீட்டாளர் ஆவர். எளிமையான மற்றும் பயனாளிகளுக்கு உதவும்படியான நிர்வாக மற்றும் காப்பீடு தீர்வை முறைகளை எல்.ஐ.சி. அல்லது அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வங்கிகள் கையாள வேண்டும்.

உத்திரவாத முறிவு

கீழ்காணும் நிலைகளில் இக்காப்பீடு முடிவுறும் (இதன் பிறகு எந்த சலுகையும் கிடையாது)

  • காப்பீட்டாளருக்கு 70 வயது அடையும்போது (அப்போதைய ஆண்டு ப்ரீமியம் செலுத்த வேண்டும்)
  • வங்கியுடனான சேமிப்பு வங்கி கணக்கு முடிக்கும் போது அல்லது கணக்கில் ப்ரீமியம் செலுத்த போதிய இருப்பு இல்லாத போது

சேர்க்கை நடைமுறை

  • மேலே குறிப்பிட்டுள்ளபடி (திட்டம் & சேர்க்கைக் காலம்) இத்திட்டமும் சேர்க்கை நடைமுறையும் செயல்பாட்டில் இருக்கும்
  • இந்தத் திட்டத்திலிருந்து ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் மற்றும் இணையலாம்
  • இத்திட்டத்தில் ஏற்கனவே, இணையாமலிருந்து புதிதாக இணையவோ அல்லது ஏற்கனவே காலாவதியாகி வெளியேறியிருந்து மீண்டும் இணைய விரும்பினாலோ அல்லது புதிதாக இத்திட்டத்திற்கு தகுதி பெற்றாலோ, அச்சமயத்தில் இத்திட்டம் நடைமுறையில் இருந்தால், பரிந்துரைக்கப்படும் நிபந்தனைகளுக்குட்பட்டு புதிப்பித்துக் கொள்ளலாம்.

ப்ரீமியம் ஒதுக்கீடு

  • காப்பீடு நிறுவனம் – ரூ.10/நபர்/வருடம்
  • முகவர்-ரூ.1/நபர்/வருடம்
  • வங்கி-ரூ.1/நபர்/வருடம்
இத்திட்டம் அடுத்தடுத்த ஆண்டுகளின் புதுப்பித்தலின் போதோ அல்லது அதற்கு முன்போ தேவை ஏற்படின் நிறுத்தப்படலாம்