Pradhan Mantri Suraksha Bima Yojana (சுரக்ஷா பீமா விபத்து காப்பீட்டுத் திட்டம்)
Pradhan Mantri Suraksha Bima Yojana – சுரக்ஷா பீமா விபத்து காப்பீட்டுத் திட்டம்
பிரதம மந்திரியின் சுரக்ஷா பீமா விபத்து காப்பீட்டுத் திட்டம்
இத்திட்டம் ஒரு வருடத்திற்கு விபத்து காப்பீடு வழங்கும். வருடா வருடம் புதுப்பித்துக்கொள்ளலாம்.
திட்டம்
- ஒரு வருட கால ஆயுள் காப்பீட்டுத் திட்டம்
- வருடா வருடம் புதுப்பிக்கப்படும்
- வங்கிகள் முலம்தான் இத்திட்டத்தைப் பெற இயலும்
திட்ட வரைமுறை
- வங்கி சேமிப்புக் கணக்கு வைத்திருக்கும், வயது 18லிருந்து 70 வயதிற்குட்பட்ட, யார் வேண்டுமானாலும், இத்திட்டத்தில் இணையலாம்
- ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருந்தால், ஏதாவதொரு கணக்கில் மட்டுமே இத்திட்டத்தைப் பெற முடியும்!
- ஆதார் எண் இதில் முதன்மைப்பங்கு வகிக்கும்
சேர்க்கை காலம்
- இத்திட்டத்தின் ஆரம்ப காலப் பயன் 01.06.2015 முதல் 31.05.2016 வரை. இதில் சேர, 31.05.2015 க்குள் ஒவ்வொருவரும் தமது கணக்கிலிருந்து பிரீமியத்தைப் பிடிக்க அனுமதித்து ஒப்புதலளிக்க வேண்டும்
- ஆரம்ப காலச் சலுகையாக, 31.08.2015 வரை கூட இத்திட்டத்தில் இணையலாம். இந்த விலக்கு மேலும் மூன்று மாதங்களுக்குக் கூட அரசாங்கத்தால் நீட்டிக்கப்படலாம். 31.08.2015க்கு பிறகு இத்திட்டத்தில் சேரும்போது, சில சிறப்பு கட்டுப்பாடுகளை ஏற்பதோடு, ப்ரீமியம் முழுவதும் செலுத்த வேண்டும்.
நன்மைகள்
விபத்து காப்பீட்டின் பயனாவது:
- விபத்தில் இறந்தால் ரூ.2 இலட்சம் வழங்கப்படும்
- விபத்தில் இரண்டு கண்களும் பார்வை பறிபோனாலோ அல்லது இரண்டு கால்கள் செயலிழந்து போனாலோ அல்லது இரண்டு கைகள் செயலிழந்து போனாலோ அல்லது ஒரு கண்ணின் பார்வையும் ஒரு கால் அல்லது ஒரு கையும் செயலிழந்து போனாலோ ரூ.2 இலட்சம் வழங்கப்படும்
- விபத்தில் ஒரு கண் பார்வை பறிபோனாலோ அல்லது ஒரு கை செயலிழந்து போனாலோ அல்லது ஒரு கால் செயலிழந்து போனாலோ ரூ.1 இலட்சம் வழங்கப்படும்
ப்ரீமியம்
- ப்ரீமியம் ஆண்டுக்கு ஒருவருக்கு ரூபாய் 12 மட்டும். அதுவும் அவரவர்களின் வங்கி சேமிப்பு கணக்கிலிருந்து பிடிக்கப்படும். ப்ரீமியம் செலுத்த கடைசி தேதி 31.05.2015. அதன் பிறகும் கூட ப்ரீமியம் செலுத்தலாம். ஆனால் காப்பீடு 01.06.2015 லிருந்தே தொடங்கும்; ப்ரீமியம் தொகை ஆண்டுக்கொருமுறை பரிசீலிக்கப்படும். எனினும் முதல் மூன்று ஆண்டுகள் இதிலிருந்து அதிகரிக்கப்படாது.
தகுதி மற்றும் நிபந்தனைகள்
- 18 வயதிலிருந்து 70 வயது வரை உள்ள சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்கும் யாரும் இத்திட்டத்தில் இணையலாம்.
முதன்மை காப்பீட்டாளர்
- பங்கெடுக்கும் வங்கிகளே முதன்மை காப்பீட்டாளர் ஆவர். எளிமையான மற்றும் பயனாளிகளுக்கு உதவும்படியான நிர்வாக மற்றும் காப்பீடு தீர்வை முறைகளை எல்.ஐ.சி. அல்லது அங்கீகரிக்கப்பட்ட காப்பீட்டு நிறுவனங்களுடன் கலந்தாலோசித்து வங்கிகள் கையாள வேண்டும்.
உத்திரவாத முறிவு
கீழ்காணும் நிலைகளில் இக்காப்பீடு முடிவுறும் (இதன் பிறகு எந்த சலுகையும் கிடையாது)
- காப்பீட்டாளருக்கு 70 வயது அடையும்போது (அப்போதைய ஆண்டு ப்ரீமியம் செலுத்த வேண்டும்)
- வங்கியுடனான சேமிப்பு வங்கி கணக்கு முடிக்கும் போது அல்லது கணக்கில் ப்ரீமியம் செலுத்த போதிய இருப்பு இல்லாத போது
சேர்க்கை நடைமுறை
- மேலே குறிப்பிட்டுள்ளபடி (திட்டம் & சேர்க்கைக் காலம்) இத்திட்டமும் சேர்க்கை நடைமுறையும் செயல்பாட்டில் இருக்கும்
- இந்தத் திட்டத்திலிருந்து ஒருவர் எப்போது வேண்டுமானாலும் வெளியேறலாம் மற்றும் இணையலாம்
- இத்திட்டத்தில் ஏற்கனவே, இணையாமலிருந்து புதிதாக இணையவோ அல்லது ஏற்கனவே காலாவதியாகி வெளியேறியிருந்து மீண்டும் இணைய விரும்பினாலோ அல்லது புதிதாக இத்திட்டத்திற்கு தகுதி பெற்றாலோ, அச்சமயத்தில் இத்திட்டம் நடைமுறையில் இருந்தால், பரிந்துரைக்கப்படும் நிபந்தனைகளுக்குட்பட்டு புதிப்பித்துக் கொள்ளலாம்.
ப்ரீமியம் ஒதுக்கீடு
- காப்பீடு நிறுவனம் – ரூ.10/நபர்/வருடம்
- முகவர்-ரூ.1/நபர்/வருடம்
- வங்கி-ரூ.1/நபர்/வருடம்
Leave a Reply