web analytics
 

MUDRA – முத்ரா

No Comments
முத்ரா வங்கிக் கடன் திட்டம்

MUDRA – முத்ரா (Micro Units Development and Refinance Agency Ltd)

குறுந்தொழில்களின் முன்னேற்றம் மற்றும் அவற்றுக்கான நிதியுதவி செய்தல் ஆகியவையே முத்ரா திட்டத்தின் சிறப்பம்சமாகும்.

பிரதம மந்திரியின் வங்கிக் கடன் திட்டம்

Mudra – முத்ரா

திட்டம்

முத்ரா திட்டம் முக்கியமான இரண்டு அடிப்படைகளில் கவனம் செலுத்தும். முதலில் குறுந்தொழில் அமைப்புகளின் நிதியுதவி (ரூ.50000 முதல் ரூ.10 இலட்சம் வரை) மற்றும் சிறு நிதி & முதலீட்டு நிறுவனங்களுக்கு உதவுவது.(MFIs)

பிரதம மந்திரியின் முத்ரா திட்டம் மூன்று பகுதியாய் பிரிக்கப்பட்டுள்ளது

  • கடன் தொகை ரூ. 50000 வரை தேவையென்றால் – சிசு (SHISHU)
  • கடன் தொகை ரூ. 50000க்கு மேலிருந்து ரூ. 5 இலட்சம் வரை தேவையென்றால் – கிசோர் (KISHOR)
  • கடன் தொகை ரூ. 5 இலட்சத்திற்கு மேலிருந்து ரூ. 10 இலட்சம் வரை தேவையென்றால் – தருண் (TARUN)

மேலும் முத்ரா திட்டத்திற்கு ஒதுக்கப்படும் நிதியில் 60% சிசு (SHISHU) திட்டத்திற்கே பயன்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

முத்ரா திட்டத்தின் சிறப்பம்சமாவது, சிசு, கிசோர் மற்றும் தருண் திட்டங்களின் கீழ் வரும் நிறுவனங்களின் வளர்ச்சிக்குண்டான நிதி மட்டுமின்றி வழிமுறை – பயன்பாடு பற்றியும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதே!

அவற்றை கருத்தில்கொண்டு கீழ்காணும் 8 விதங்களில் முத்ரா திட்டம் கவனம் செலுத்துகிறது.

  1. வணிக நிறுவனங்கள் மற்றும் செயல்பாடுகள் சார்ந்த உதவி

இத்திட்டத்தின் கீழ் பெரும்பான்மையான நிறுவனங்கள் பயன்பெற வேண்டுமென்று கீழ்காணும் 4 துறைகளில் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது.

1.1 தரைவழி போக்குவரத்து மற்றும் அவை சார்ந்த செயல்பாடுகள்

சரக்கு போக்குவரத்து வாகனங்கள் அல்லது தனி நபர் போக்குவரத்து வாகனங்கள் – ஆட்டோ ரிக்ஷா, பயணிகள் மகிழ்வுந்து, டாக்ஸிகள், 3 சக்கர வாகனங்கள் முதலியன வாங்குவதற்கு நிதியுதவி

1.2  சமுதாய மற்றும் தனி நபர் சேவைகள்

சிகை அலங்காரம், முடி திருத்துமிடம், தையல் கடைகள், பூக்கடைகள், உடற்பயிற்சி நிலையங்கள், துணி துவைக்குமிடங்கள், இரு சக்கர வாகன பழுதுபார்க்கும் இடங்கள், புத்தக பிரிண்டிங் மற்றும் வடிவமைக்கும் இடங்கள், நிழல் பிரதி எடுக்குமிடங்கள், மருந்துக்கடைகள், தபால் முகவர்கள் மற்றும் இதர பிற சேவைகளுக்கான நிதியுதவி

1.3 உணவுத்துறை நிறுவனங்கள்

அப்பளம் தயாரித்தல், ஜாம் / ஜெல்லி தயாரித்தல், விவசாய விளை பொருட்கள் பாதுகாத்தல், இனிப்பு கடைகள், சிறு உணவகங்கள், தினசரி உணவக கடைகள், உணவகங்கள், குளிர்சாதன வாகனங்கள், ஐஸ் உற்பத்திச்சாலைகள், ஐஸ்க்ரீம் தயாரித்தல், பிஸ்கட், ரொட்டி, தயாரித்தல் முதலிய தொழில்களுக்கான நிதியுதவி

1.4 ஜவுளித்துறை மற்றும் செயல்பாடுகள்

கைத்தறி, விசைத்தறி, காதி மற்றும் நுண்கலை வேலைப்பாடுகள், பாரம்பரிய எம்ப்ராய்டரி மற்றும் கைத்தொழில், பாரம்பரிய சாயம் மற்றும் அச்சிடுதல், ஆடை வடிமைப்பு, பின்னல், பருத்தி விதை நீக்கல், கணினி எம்ப்ராய்டரி, தையல் மற்றும் இதர துணி அல்லாத பொருட்களான பைகள், வாகன பாகங்கள் முதலிய தொழில்கள் மேற்கொள்வதற்கான நிதியுதவி

இத்திட்டம் நாட்போக்கில் இதர பிற தொழில்களுக்கும் நிதியுதவி வழங்கும்!

2. சிறு கடன் திட்டம்

தனி நபர்கள், சுய உதவி குழுக்கள் மற்றும் MSMED சட்டத்தின்படி சிறு நிறுவனங்களை (RBI யின் பரிந்துரையின்படி சொத்தாக உருவாக்க) நிறுவ அல்லது நடத்த (JLGs / SHGs) மற்றும் பண்ணை சாரா வருவாய் ஈட்டும் தொழில்களுக்கான நிதியுதவி

3. மத்தியஸ்த கடன் திட்டம்

MSMED சட்டத்தின்படி தனி நபர்கள் சிறு நிறுவனங்கள் தொடங்க அல்லது நடத்த, பண்ணை சாரா வருவாய் ஈட்டும் (ரூ. 5௦௦௦௦ முதல் 10 இலட்சம் /நிறுவனம் அல்லது நபர்) தொழில்களுக்கான நிதியுதவி பெறுவதில் இடைத்தரகர்களுக்கான நிதியுதவி

4. வட்டார கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மறு நிதியுதவி

MSMED சட்டத்தின்படி உற்பத்தி மற்றும் சேவைத்துறையில் உள்ள சிறு நிறுவனங்களுக்கு (ரூ.10 இலட்சம் வரை /நிறுவனம் அல்லது தனி நபர்) வழங்கப்பட்ட கடன்களின் மீது வட்டார கிராமப்புற மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கான மறு நிதியுதவி

5. மகிளா உத்யாமி திட்டம்

மகிளா உத்யாமி திட்டத்தின்கீழ், மகளிர், மகளிர் சுய உதவி குழுக்கள், MSMED சட்டத்தின்கீழ் JLGs / SHGs சிறு நிறுவனங்கள் (RBIயின் பரிந்துரைப்படி சொத்தாக உருவாக்க) தொடங்க அல்லது நடத்த தேவையான நிதியுதவியை சிறு நிதி நிறுவனங்களுக்கு வழங்க.

6. வணிகக் கடன்கள்

வர்த்தகர்கள் மற்றும் கடைக்காரர்களுக்கு தேவையான நிதியுதவி (10 இலட்சம் வரை/நபருக்கு அல்லது நிறுவனத்திற்கு)

7. உபகரணங்களுக்கு நிதியுதவி

தனி நபர்கள் சிறு நிறுவனங்கள் நிறுவ தேவையான இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்க (ரூ.10 இலட்சம் வரை / நபருக்கு அல்லது நிறுவனத்திற்கு) நிதியுதவி

8. புதுமையான வரங்கள்

8 (i) எல்லாவற்றிக்கும் முன்னோடியாய், பயன்கள் நிரப்பப்பட்ட முத்ரா அட்டை வழங்கப்படும்
  • மூலப்பொருட்களை, சாதனங்களை பதிவு செய்யப்பட்ட உற்பத்தியாளர்களிடமிருந்து ஆன்லைன் தளத்தில் முன் அனுமதிக்கப்பட்ட கடன் வசதிக்குள் பயன்படுத்திக் கொள்ளலாம்
  • பிரதம மந்திரியின் ஜன் தன் யோஜனா சேமிப்பு கணக்குடன் இணைத்துக்கொண்டு இவ்வட்டையை பயன்படுத்திக்கொள்ளலாம்
  • முத்ரா அட்டை உடனடி பயன்பாட்டிற்காக தயார் நிலையில் உள்ளது
8 (ii) தொகுப்பு கடன் உத்திரவாதம்
  • இந்திய பாரம்பரிய நிதியுதவியானது சொத்துகளின் அடிப்படைகளிலேயே இருக்கும். சிறு நிறுவனங்கள் இத்தேவையை பெரும்பாலும் பூர்த்தி செய்ய இயலாமலே போகும்.
  • முத்ரா இதற்கு மாற்றாக கடன் உத்திரவாத தயாரிப்பாக, தொகுப்பு கடன் உத்திரவாதம் என்ற திட்டத்தை உள்ளடக்கியுள்ளது. இத்திட்டத்தில் கடன் உத்திரவாதம் மற்றும் இடர் பகிர்தல் தனி நபர்களுக்கு பிரியாமல் தொகுப்பாக பிரியும்.
  • அடமானக் கடன்களை நிறுத்தி விட்டு புதுமையான தொழில் முன்னேற்ற நிதியுதவி, சிறு நிறுவன நிதியுதவி ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த வேண்டிய காலம் நெருங்கிவிட்டது
8 (iii) கடன் விரிவாக்கம் மற்றும் உத்திரவாத வசதிகளுக்கான வளங்கள் உருவாக்கல்
  • நிலுவையிலுள்ள கடன் உத்திரவாத திட்டங்கள் பற்றியும் மறு நிதியுதவிகளின் நிலை குறித்தும் சீராக ஆய்வு செய்யப்படும்.
  • தொகுப்பு கடன் திட்டத்தின் கீழ் முதல் இழப்பு மற்றும் அதன் இடர் காத்தல் குறித்தும் அதற்கான இழப்பீடு மற்றும் சரி செய்தல் குறித்த கொள்கை ரீதியிலான உதவிகளும் வழங்கப்படும்
  • அடுத்தடுத்த இழப்புகளின் இழப்பிற்கும் இத்திட்டத்தில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது
8 (iv) இடைத்தரகர்களுக்கு எழுத்துறுதி
  • முத்ராவின் சிறப்பம்சமாவது ‘பிரச்சினைகளை தீர்த்தல்’ என்பதை முதுகெலும்பாகக் கொண்டிருப்பதேயாகும்
  • பெரு-நிறுவனமல்லாத குறுந்தொழில் அலகுகள் (NCSB – Non Corporate Small Business Sectors) ஆகியவற்றின் நிதி பராமரிப்பு மற்றும் உதவிகள் குறித்து இடைத்தரகர்கள் மற்றும் கடை நிலை பைனான்சியர்கள் அதிகம் அறிந்திருக்க சாத்தியக்கூறுகள் உண்டு. எனவே அவ்வாறான இடைத்தரகர்கள் / பைனான்சியர்களுக்கு நிதியுதவி செய்தல் முத்ராவின் சிறப்பாகும்
  • NCSBS அலகுகளின் கடன் விரிவாக்கம் இடைத்தரகர்கள் / பைனான்சியர்களின் முதல் இழப்புகளை சரி செய்யவும், மேம்படுத்திக்கொள்ளவும் உதவும்
  • இவற்றிக்கெல்லாம் மேலாக நடப்பில் உள்ள வெற்றிகரமான நிதியுதவி திட்டங்களை மாதிரியாகவும் ஏற்றுக்கொள்ளப்படும்
8 (v) வணிகம் / வங்கித் தொடர்பு மாதிரி

இத்திட்டம் வங்கிகளின் மற்றும் பொது வணிக நிர்வாகங்களின் நடைமுறை மாதிரியில் இயங்கும்

முத்ரா – சிறப்பம்சங்கள்

கடன் கட்டுப்பாடுகள் தவிர்த்து, NCSBs க்கு பெரும் சவாலாக இருப்பவை:

  • திறன் மேம்பாட்டு இடைவெளிகள்
  • அறிவுசார் இடைவெளிகள்
  • தகவல் ஒருங்கிணைப்பின்மை
  • நிதி மேலாண்மை விழிப்புணர்வு
  • வளர்ச்சி நோக்குநிலை பற்றாக்குறை

இவற்றை கருத்தில்கொண்டு, முத்ரா கடன் மட்டுமின்றி தொழில் அணுகுமுறை, மேம்பாடு மற்றும் அதரவு சேவைகளிலும் ஈடுபடுகிறது

Categories: National Tags: Tags: ,

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *