web analytics
 

Vidyarthi Vigyan Manthan

No Comments
Vidyarthi Vigyan Manthan

Vidyarthi Vigyan Manthan – வித்யார்த்தி விக்ஞ்யான் மந்தன்

 

VVM என்றால் என்ன?

Vidyarthi Vigyan Manthan – வித்யார்த்தி விக்ஞ்யான் மந்தன் சுருக்கமாக VVM என்ற செயல்முறை, ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களிடம், அறிவியலை அறிமுகப்படுத்தவும், அறிவியல் அறிவைக் கூட்டவும், நடத்தப்பெறும் ஒரு தேசியத் தேர்வுத்திட்டமாகும்.

Vidyarthi Vigyan Manthan – வித்யார்த்தி விக்ஞ்யான் மந்தன் செயல்முறை Vijnana Bharati (VIBHA) – விஞ்ஞான பாரதியின் முயற்சியில், இந்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி நிறுவனமான விஞ்ஞான் பிரசாரின் கூட்டுமுயற்சியோடு, மனித வளம் மற்றும் மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கும் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் குழுவின் (National Council of Educational Research and Training – NCERT) கூட்டுமுயற்சியுடனும் தொடங்கப்பட்டது.

Vidyarthi Vigyan Manthan – வித்யார்த்தி விக்ஞ்யான் மந்தன் என்பதின் தாரக மந்திரமாவது, “புதிய இந்தியாவின் அறிவியல் திறன் தேடல்” என்பதாகும்.

 

Vidyarthi Vigyan Manthan – வித்யார்த்தி விக்ஞ்யான் மந்தன் – நோக்கம்

  • மாணவர்களுக்கு உண்மையான அறிவியலின் மீது ஆர்வத்தைத் தூண்டல்
  • மாணவர்களுக்கு பயிற்சி பட்டறைகள் மூலம் அறிவியல் பயில உதவல்
  • மாணவர்களின் அறிவியல் அணுகுமுறையை இனங்காண, போட்டி மனப்பான்மையிலான, தேர்வுகள் வைத்தல்
  • மாணவர்களின் அறிவியல் உயர் கல்விக்கு, அவர்களின் வழிகாட்டிகள் முன்னேற்பாடுகளைச் செய்ய உதவுதல்
  • இந்த உலகிற்கு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில், பாரம்பரியமாக இந்தியாவின் பங்களிப்பு பற்றி (நவீன காலம் வரை) பள்ளி மாணவர்களுக்குக் கற்பித்தல்
  • வெற்றி பெறும் மாணவர்களுக்கு, நாடு முழுவதும் உள்ள ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனங்களை நேரில் கண்டு, தெளிவு பெறும் வண்ணம், பார்வைகள் ஏற்பாடு செய்தல்
  • மாநில மற்றும் தேசிய அளவில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு, பரிசுகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கி ஊக்குவித்தல்

Vidyarthi Vigyan Manthan – வித்யார்த்தி விக்ஞ்யான் மந்தன் எப்படி நடைபெறுகிறது?

இந்த திட்டத்தில் பங்குபெற விரும்பும் மாணவர்கள் கீழ்காணும் பல கட்டத் தேர்வுகளை கடக்க வேண்டும்.

  • புறநிலைத் தேர்வு வகை கேள்விகள் (Objective)
  • விரிவான பதிலுரைகள்
  • விளக்கம் மற்றும் குழு கலந்தாய்வுகள்
  • தனிப்பங்காற்றுதல்
  • நடைமுறைத் தேர்வுகள்
  • அறிவியல் வழிமுறைகள்

பள்ளி, மாநில மற்றும் தேசிய அளவில், ஒவ்வொரு மாணவரும் அவரவர் வகுப்பு மாணவர்களோடு ஒப்பிடப்பெற்று, மதிப்பிடப்படுவர்.

Vidyarthi Vigyan Manthan – வித்யார்த்தி விக்ஞ்யான் மந்தன் நிலைகள் என்ன?

பள்ளி நிலைத் தேர்வுகள்

  • இளையோர் (வகுப்பு 6 முதல் 8 வரை)
  • மூத்தோர் (வகுப்பு 9 முதல் 11 வரை)
  • தேர்வு நேரம்: 2 மணிநேரம்
  • தேர்வு மதிப்பெண்: 100 (புறநிலை தேர்வு)
  • தேர்வு மொழி: ஆங்கிலம் மற்றும் ஹிந்தி (விதிகளுக்குட்பட்டு: 9 பிராந்திய மொழிகள்)
  • தேர்வின் பாடங்கள் மற்றும் பாடத்திட்டங்கள் “http://www.vvm.org” என்ற தளத்தில் பெற்றுக்கொள்ளலாம்

மாநில முகாம் (State Level Camp – SLC)

ஒவ்வொரு வகுப்பிலும், மாநில அளவில், முதல் 20 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு, ஒன்று அல்லது இரண்டு நாள், மாநில முகாம் நடைபெறும். அந்த முகாமில், மாணவர்களின் அறிவியல் திறனை பல்வேறு சோதனைகள் மூலம் கண்டறிவர்.

தேசிய முகாம் (NATIONAL CAMP – NC)

ஒவ்வொரு மாநிலத்திலும், ஒவ்வொரு வகுப்பிலும், முதல் இரண்டு இடங்களைப் பெறும் மாணவர்கள், அதாவது, ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 12 மாணவர்கள், இரண்டு நாட்கள் நடைபெறும், தேசிய முகாமிற்கு தேர்வு செய்யப்படுவர். அந்த முகாமில், மாணவர்களின் அறிவியல் திறனை பல்வேறு சோதனைகள் மூலம் கண்டறிவர்.

Vidyarthi Vigyan Manthan – வித்யார்த்தி விக்ஞ்யான் மந்தன் – மாணவர் விருதுகள்

பள்ளி அளவில் – முதல் நிலை

  • ஒவ்வொரு வகுப்பிலும், ஒரு பள்ளியில், முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் (ஒரு பள்ளிக்கு 18 சான்றிதழ்கள்)

மாவட்ட அளவில் – இரண்டாம் நிலை

  • ஒவ்வொரு வகுப்பிலும், ஒரு மாவட்டத்தில், முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு தகுதிச் சான்றிதழ் (ஒரு மாவட்டத்திற்கு 18 சான்றிதழ்கள்)

மாநில அளவில் – மூன்றாம் நிலை

  • ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு மாநிலத்தில் முதல் 20 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு மாநில முகாம் பங்கேற்புச் சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு
  • ஒவ்வொரு வகுப்பிலும் ஒரு மாநிலத்தில் முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு மாநில முகாம் பங்கேற்புச் சான்றிதழ், நினைவுப்பரிசு மற்றும் ரொக்கப்பரிசு (முதல் இடம் ரூ.5000/-, இரண்டாம் இடம் ரூ.3000/- மற்றும் மூன்றாம் இடம் ரூ.2000/-)
  • மாநில முகாமின் ‘வெற்றியாளர் நினைவுப்பரிசு’

தேசிய அளவில் – நான்காம் நிலை

  • ஒவ்வொரு வகுப்பிலும், ஒரு மாநிலத்தில், முதல் 2 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு, தேசிய முகாம் பங்கேற்புச் சான்றிதழ் மற்றும் நினைவுப்பரிசு
  • ஒவ்வொரு வகுப்பிலும், தேசிய அளவில், முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு, தேசிய முகாம் பங்கேற்புச் சான்றிதழ், நினைவுப்பரிசு, ‘ஹிமாலயன்’ என்னும் பட்டம் மற்றும் ரொக்கப்பரிசு (முதல் இடம் ரூ.25000/-, இரண்டாம் இடம் ரூ.15000/- மற்றும் மூன்றாம் இடம் ரூ.10000/-)
  • தேசிய முகாமின் ‘வெற்றியாளர் நினைவுப்பரிசு’
  • ஒவ்வொரு வகுப்பிலும், மண்டல அளவில், முதல் 3 இடங்களைப் பெறும் மாணவர்களுக்கு, தேசிய முகாம் பங்கேற்புச் சான்றிதழ், நினைவுப்பரிசு, ‘ஹிமாலயன்’ என்னும் பட்டம் மற்றும் ரொக்கப்பரிசு (முதல் இடம் ரூ.5000/-, இரண்டாம் இடம் ரூ.3000/- மற்றும் மூன்றாம் இடம் ரூ.2000/-)

Vidyarthi Vigyan Manthan – வித்யார்த்தி விக்ஞ்யான் மந்தன் – எப்படி கலந்து கொள்வது?

இந்தத் தேர்வு, முழுமையாக, இணையம் மூலமே நடைபெறுகிறது. இந்தத் தேர்விற்கு, மாணவர்கள் அவரவர் பயிலும் பள்ளிகள் மூலமே பங்குபெற வரவேற்கப்படுகிறார்கள். எனினும், தனியாகவும் விண்ணப்பிக்கலாம். (இடம் மற்றும் தேர்வு நிலையம் சார்ந்து ஒதுக்கப்படலாம்)

 

இந்த வருடத்திற்கான தேர்வு நிலைகளை கீழே காணலாம்

VVM Registration

VVM Registration

 

காலம் பொன் போன்றது – குறித்துக் கொள்ளவும்

VVM DTR 2019-20

VVM Dates To Remember 2019-20

 

நன்றி:http://www.vvm.org
[இப்பதிவின் தகவல்கள் இத்தளத்திலிருந்தே பகிரப்பட்டுள்ளன! மேலும் விபரங்களுக்கு, இத்தளத்தை பார்வையிடவும்]

 

அறிவில் அறிவியல் அறிவோம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *