Atal Pension Yojana (அடல் ஓய்வூதியத் திட்டம்)
Atal Pension Yojana – அடல் ஓய்வூதியத் திட்டம்
அடல் ஓய்வூதியத் திட்டம்
இத்திட்டம் வருமான வரி செலுத்தத் தேவையில்லாத மற்றும் வேறு எந்த சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் பயனடையாத குடிமக்களுக்கு வரப் பிரசாதமாகக் கிடைத்திருக்கிறது.
திட்டம் – வரைமுறை மற்றும் கட்டுப்பாடுகள்
- இத்திட்டத்தில் 18 வயதிலிருந்து 40 வயதிற்குட்பட்ட குடிமக்கள் சேரலாம்
- வேறு எந்த சமூக பாதுகாப்பு திட்டங்களின் கீழ் (உதாரணம்: வருங்கால வைப்பு நிதி) பயனாளியாக இருக்க கூடாது
- வருமான வரி கட்டத் தேவையில்லாத வருமானமுடையவராய் இருத்தல் அவசியம்
- இத்திட்டத்தில் இணையும்போது நிர்ணயிக்கும் ஓய்வூதியத் தொகையே இறுதியானது.
- ஓய்வூதியம் குறைந்த பட்சம் மாதம் ரூ.1000 / ரூ.2000 / ரூ.3000 / ரூ.4000 / ரூ.5000 என்ற அளவுகளிலேயே கிடைக்கப்பெறும். ஒருவேளை இந்நிதியிலிருந்து அதிகப்படியான வருமானம் வரும் பட்சத்தில் பயனாளிகளுக்கும் அதற்கேற்ப அதிகம் கிடைக்கலாம்.
சேர்க்கை
- வங்கிகள் முலம்தான் இத்திட்டத்தைப் பெற இயலும்
- இத்திட்டத்தை சேமிப்பு கணக்கு வைத்திருக்கும் வங்கியிலேயோ அல்லது வலைதள வங்கிச் சேவையிலோ பெறலாம்.
- ஒன்றுக்கு மேற்பட்ட கணக்குகள் இருப்பின் ஏதாவதொரு கணக்கில் மட்டுமே இத்திட்டத்தில் இணைய முடியும்.
சலுகை
- 31.12.2015க்குள் இத்திட்டத்தில் இணைபவர்களுக்கு 5 வருடங்களுக்கு, 50% சதவீதம் அல்லது வருடத்திற்கு ரூ.1000, இவற்றில் எது குறைவோ அதை மத்திய அரசாங்கமே செலுத்தும். (2015-16 லிருந்து 2019-20 வரை)
ப்ரீமியம்
- 18 வயதில் சேரும் ஒருவர் மாதம் ரூ.1000 ஓய்வூதியம் பெற விரும்பினால் அவர் மாதம் ரூ.42 செலுத்த வேண்டும்.
- 40 வயதில் சேரும் ஒருவர் மாதம் ரூ.1000 ஓய்வூதியம் பெற விரும்பினால் அவர் மாதம் ரூ.291 செலுத்த வேண்டும்.
- எனவே எவ்வளவு சிறு வயதில் இத்திட்டத்தில் இணைகிறோமோ அவ்வளவிற்கு நாம் கட்ட வேண்டிய தொகை குறையும்.
- பிரீமியம் மாதாந்திரமாகவோ, மூன்று மாதங்களுக்கொருமுறையாகவோ, வருடத்திற்கிருமுறையாகவோ செலுத்தலாம்.
பயன்
- இத்திட்டத்தில் ஒருவர் செலுத்தும் காலமானது குறைந்தபட்சம் 20 ஆண்டுகள் ஆகும்
- 60 வயதிலிருந்து ஓய்வூதியம் மாதாமாதம் கிடைக்கும்.
- பயனாளிக்கு வழங்கப்படும் ஓய்வூதியம், அவரது மறைவிற்குப் பிறகு அவரது துணைவருக்கு வழங்கப்படும். அவர்களிருவரின் மறைவிற்குப் பிறகு வாரிசுதாரருக்கு இழப்புத் தொகை வழங்கப்படும்
விளக்கம்
மாதம் ரூ. 1000 (குறைந்தபட்சம்) ஓய்வூதியம் பெற, கட்ட வேண்டிய ப்ரீமியம் மற்றும் இதர விபரங்கள் இதோ.
மாதம் ரூ. 2000 (குறைந்தபட்சம்) ஓய்வூதியம் பெற, கட்ட வேண்டிய ப்ரீமியம் மற்றும் இதர விபரங்கள் இதோ.
மாதம் ரூ. 3000 (குறைந்தபட்சம்) ஓய்வூதியம் பெற, கட்ட வேண்டிய ப்ரீமியம் மற்றும் இதர விபரங்கள் இதோ.
மாதம் ரூ. 4000 (குறைந்தபட்சம்) ஓய்வூதியம் பெற, கட்ட வேண்டிய ப்ரீமியம் மற்றும் இதர விபரங்கள் இதோ.
மாதம் ரூ. 5000 (குறைந்தபட்சம்) ஓய்வூதியம் பெற, கட்ட வேண்டிய ப்ரீமியம் மற்றும் இதர விபரங்கள் இதோ.