Unnat Jyoti by Affordable LEDs for All – UJALA
Unnat Jyoti by Affordable LEDs for All – UJALA
UJALA திட்டம் (Unnat Jyoti by Affordable LEDs for All)
நம் பாரத நாட்டின் மொத்த மின் நுகர்வில் 20% விளக்குகளுக்கு மட்டுமே தேவைப்படுகின்றது.வளர்ந்து வரும் மின்தேவை மற்றும் வெப்ப நிலை மாற்றங்களைக் கருத்தில் கொண்டு நமது மின் நுகர்வை ஒழுங்குப்படுத்த வேண்டி 05.01.2015 அன்று பாரதப் பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே, Unnat Jyoti by Affordable LEDs for All. தமிழில் “அனைவர்க்கும் ஏற்ற LED விளக்குகள் மூலம் பெறக்கூடிய உன்னத ஒளி” சுருக்கமாக UJALA திட்டம் எனப்படுகிறது.
திட்டம் – செயல்முறை
- Energy Efficiency Services Limited (EESL) – இது இந்திய அரசாங்கத்தின் “சக்தி அமைச்சகத்தின்” கீழ் உருவாக்கப்பட்டுள்ள அமைப்பு
- இந்த UJALA திட்டத்தை அமலாக்கம் செய்வதும் அதைக் கண்காணிப்பதும் இவ்வமைப்பின் தலையாய பணியாகும்
நோக்கம்
- ஒளிக்கான மின்னுகர்வைக் குறைப்பதின் மூலம் பற்றாக்குறையை சமாளித்தல்
- குறைந்த மின்னுகர்வில் நிறைந்த ஒளி பெறுவதோடு மின்கட்டணமும் குறைத்தல்
- மக்களுக்கு விலை மலிவான பொருள்களை விட நீண்ட நாள் பயன்தரும் காரணிகள் பற்றிய விழிப்புணர்வைக் கொண்டு வருதல்
இலக்கு
- மார்ச் 2019க்குள் பயன்பாட்டில் உள்ள 77 கோடி பழைய விளக்குகளை LED விளக்குகளாக மாற்ற இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
நடப்பு நிலை
- நடப்பு நிலவரப்படி, 28.48 கோடி LED விளக்குகள் விநியோகிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 7400 மெகா வாட் மின்சார நுகர்வு குறைந்துள்ளது.